பைஸர் தடுப்பூசி வழங்கும் அதிகாரம் யாருக்கு?

301

பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இது குறித்து அறிவித்துள்ளார். புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசியை வழங்குவதில் ஏற்பட்ட குழப்ப நிலையை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளின் மூலம் பைஸர் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியற்ற நபர்களுக்கு அதனை வழங்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE