வவுனியாவில் மாணவியின் கொலையை வீதிகளில் ரயர்களை போட்டு எரித்த வண்ணம் கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில்

350

 

 

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்று (21-05-2015) வவுனியா மாவட்ட

வர்த்தக சங்கத்தினால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed

இது தொடர்பாக மேற்படி சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

புங்குடுதீவு மாணவி சி.வித்தியா மிகக் கொடுரமான முறையில்

வன்முறைக்உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டிக்கும் முகமாகவும் மரணம்

அடைந்த மாணவிக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாகவும் (21-05-2015) நேற்று

வவுனியா வர்த்தக சங்கம் ஏற்;;பாடு செய்திருந்தது.

இந்த படுகொலைக்குயில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை முலம் கடுமையாக தண்டனைக்கு

உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இனி வரும் காலங்களில் இது போன்ற கொடுரமான

செயல்கள் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் மேற்படி

மாணவியின் படுகொலை இலங்கை சரித்திரத்தில் மறக்க மண்ணிக்க முடியாத கொடூரம் இச்

சம்பவம் இலங்கை பாடசாலை மாணவர்கள் சமுகத்தில் ஒரு கறுப்பு புள்ளி ஆகையால்

இலங்கை நீதித்துறை சட்ட வல்லுனர்கள் மற்றும் கல்வி மான்கள் மற்றும் அனைத்து

தரப்பினரும் ஒன்றினைத்து கவனத்திலெடுத்து இலங்கை அரசியல் சட்டத்தில் மேலதிக

கடும் நடவடிக்கையை சேர்த்து கொள்ள வேண்டும என அந்த அறிக்கையில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளையில் கண்டனத்தினை வெளிப்படுத்தும் வகையில் வர்த்தக நிலையங்கள்

முடப்பட்டும் துக்கத்தினை வெளிப்படுத்தும். முகமாக கொடிகள் கட்டப்பட்டும்

வித்தியாவின் புகைப்படம் தொங்க விடப்பட்டும் அரச அரசசார்பற்ற

நிறுவனங்களின் செயற்ப்பாடுகள் செயல் இழந்தும்

பாடசாலைகள் முடப்பட்டும். இருந்தை அவதானிக்க முடிந்ததுடன் வவுனியாவில் பல்வேறு

இடங்களில் கண்டனத்தினை வெளிப்படுத்தும் முகமாக பொதுமக்கள் வீதிகளில் ரயர்களை

போட்டு எரித்த வண்ணம் கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டதையும் பொலிசாரும் வீதிகளின் பாதுகாப்புக்கா குவிக்கப்பட்டிருந்தையும்

பொலிசார் வீதி தடைகளை அற்றுவதையும் காண முடிந்தது.

SHARE