ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் புண்ணியத்திற்காக அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டவர்கள்.- ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா.

316
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஓரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் புண்ணியத்திற்காக அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டவர்கள்.

அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவும், புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கவுமே நாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டோம்.

மக்களுக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.

நாம் பதவிகளுக்காக ஆசைப்பட்டு சென்றதாக சிலர் எம்மீது விமர்சனக் கணைகளை தொடுத்தார்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு குறுட்டு அதிஸ்டத்தில் பிரதமர் பதவி கிடைத்துள்ளது.

மக்கள் ஆணையினால் பதவி கிடைக்கவில்லை, பிரதமர் வார்த்தைகளினால் நீதிமன்றின் மீது கல் எறியும் போது வடக்கு மக்கள் நிஜக் கற்களைக் கொண்டு நீதிமன்றை தாக்குகின்றனர்.

மஹிந்த பிரதமராகுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

SHARE