குற்றவாளிகளுள் ஒருவரான சுவிஸ் நாட்டு இலங்கைப் பிரஜை சசிகுமார் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் பின்னர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 129 பேரை கைது செய்திருந்தனர். இவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டனர்.
இதன்படி 4 பிரிவுகளாக ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையும் இரண்டாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 39 பேரை ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 33 பேரையும் 4 ஆவதாக ஆஜர்படுத்தப்பட்ட 14 பேரையும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கறிஞர்கள் எழுந்து நின்று பொலிஸாருடன் இணைந்து பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்து வைக்கும் அளவுக்கு இடம் போதமையால் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வித்யாவின் கொலை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 சந்தேநபர்களின் விளக்கமறியல் உத்தரவு, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபரான கொழும்பில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் அதீத நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
2ம் இணைப்பு
புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களையும், நீதிமன்றம் மீதான தாக்குதலில் கைதான சந்தேக நபர்களையும் அனுராதபுரம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் குறித்த சந்தேக நபர்களை யாழ்.சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்கள் மீது தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.
இதேவேளை இன்றைய தினம் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி சந்தேக நபர்களை அனுராதபுரம் கொண்டு செல்ல பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
- வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர் விளக்கமறியலில்.. – பிரதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
- வெடித்தது மாணவர்களின் போராட்டம்! சிதைத்தனர் திட்டம் தீட்டி!
- யாழ். சம்பவங்கள் பயங்கரவாதத்தின் அடிப்படையாக அமையலாம்!- மஹிந்த எச்சரிக்கை
- படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு வடக்கு மாகாணசபையில் கண்டனமும் அனுதாபமும்
- வித்தியாவின் படுகொலையை கண்டித்து மல்லாவியில் தொடரும் போராட்டம்
- கைதானவர்கள் அனைவருக்கும் விளக்கமறியல்! அநுராதபுரம் சிறையில் அடைப்பு!
- வித்தியாவுக்கு நீதி வேண்டி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- புங்குடுதீவு மாணவி படுகொலை! மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
- மாணவி படுகொலையாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்! விஜயகலா
- வித்தியா கொலை விசாரணை! சி.ஐ.டி. குழு யாழ்.விரைவு
- வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்
- யாழ் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மேலும் கைது செய்யப்படுவர்: பிரதிப் பொலிஸ்மா அதிபர்
- கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வித்தியாவின் கொலையை கண்டித்து பேரணி
- மாணவியின் கொலைக்கு எதிராக வீறுகொண்ட மக்கள் எழுச்சி
- சுவிஸ் நாட்டு பத்திரிகைகளிலும் வித்தியாவின் படுகொலையும் யாழின் நிலவரமும்