மியான்மரில் இருந்து தஞ்சம்கேட்டு வந்த 7 ஆயிரம் அகதிகளுக்கு, தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்க இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது.மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வரும் அகதிகளுக்கு மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அனுமதி அளிக்க மறுத்து வந்தது.
இதனால் தாய்லாந்து மற்றும் மலேசிய கடற்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் உண்ண உணவுமின்றி, சிறுநீரைக்குடித்து வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இவ்விவகாரம் சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியததைத் தொடர்ந்து ஐநாவின் கோரிக்கையின் பேரில், அகதிகளை காப்பாற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் 7 ஆயிரம் அகதிகளுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு இடமளித்தன. நடுக்கடலில் தத்தளித்த அகதிகள் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, கரைக்கு கொண்டுவரப்பட்டு தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் சில அனாதை குழந்தைகளும் உள்ளனர், அக்குழந்தைகள் நாடுமின்றி, வீடுமின்றி, தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. |