அரசியல்களம் தற்பொழுது சூடு பிடித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறத்திலே தமிழ் கட்சிகள் தற்பொழுது ஒன்றுக்குள் மோதுகின்ற சூழலை உருவாக்கி ஜெனீவா கூட்டத்தொடரை குழப்புவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. உண்மையிலே இதில் தமிழ் தரப்பு தெளிவடைய வேண்டும். ஒருவிடயம் என்னவென்றால் பல வருடங்களாக இடம்பெற்ற இந்த இனப்படுகொலை சம்பந்தமாக இனப்படுகொலை என்றால் என்ன?, ஒரு இனமாகவோ அல்லது குழுவாகவோ அழிக்கப்பட்டால் அது இனப்படுகொலை என்ற வரைவிலக்கணங்கள் ஐந்து வரையறைகள் பற்றி சட்டத்தரணிகளுக்கும் தெரியும் அதேநேரம் அரசியல் புத்திஜீவிகளுக்கும் தெரியும்.
ஆகவே புதிதாக இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றதா இல்லையா என கூறவேண்டிய தேவை இல்லை. இருந்தபோதிலும் அதனை குழப்புவதற்கான பல நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்காக வடகிழக்கிணைந்த ஒரு தமிழர் தாயகத்திலே ஒரு அரசியல் தீர்வு வரவேண்டம் என்பதிலே முழுமூச்சாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கிடையே குழப்பங்களை உருவாக்கி இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜாவா அல்லது இரா.சம்பந்தன் அவர்கள் தலைவரா அல்லது ஸ்ரீதரனா அல்லது சரவணபவனா என பதவிப்போட்டிகள் இடம்பெறுகின்றதே தவிர தமிழ் மக்களுக்கான நீதி வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இவர்கள் முழுமூச்சாக செயற்படவில்லை. கடந்த 37,38 வது அமர்வுகள் அனைத்தும் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் கூட என்னவானது என்றுகூட இதுவரை தெரியவில்லை. அதாவது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் போன்றவர்களும் அங்கு ஆவணங்களை கொடுத்திருந்தார்கள். இதில் என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது. 47 கியூமன் ரைட்ஸ் அணி இருக்கின்றது இவர்கள் அங்கு என்ன செய்தார்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தார்களா? அல்லது தமிழ் மக்களுடைய நடவடிக்கையை மேற்கொண்டார்களா என்றுகூட தெரியாத நிலையில் தான் இதுவரையிலும் தமிழ் மக்களுடைய இனப்படுகொலை சம்பந்தப்பட்ட விடயங்கள் இருக்கின்றன.
ஆகவே இதனை மேற்கொண்டு எவ்வாறு செய்ய வேண்டும் தற்பொழுது கொரோனா வைரஸினால் அதிகூடிய தாக்கம் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அனைத்து நாடுகளிலும் முடிவுற்று இறுதியாக இலங்கையிலே கொரோனா வைரஸ் பதம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது ஒன்று மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டம் என்ற விடயத்தையும் கையாள வேண்டும். ஆனால் தற்போதைய சூழல் கட்சிகளுக்கிடையே மோதுவது அல்லது முஸ்லிம்கள் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது ஒரு இனப்படுகொலை என்ற போர்வையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பிலே இருக்கின்ற சுமந்திரன் அவர்கள் கூறுவது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளபடமுடியாதது ஒன்று. இதுவரையிலே நேரடியாக ஒரு சவாலை விடுகின்றேன். தமிழ் தரப்பு இதுவரையில் ஜெனீவாவில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் வெறும் எழுத்து வடிவில் மட்டுமே அவர்களிடம் இருக்கின்றது. அறிக்கையாக இருக்கின்றது. ஆதாரங்கள் என்று இவர்கள் எதை வழங்கியிருக்கிறார்கள். அல்லது ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் ஈழப்போரின் இறுதிக்கட்டத்திலே கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பினிடமோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமோ அல்லது ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளிடமோ இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்று ஆதாரமாக கொடுத்தார்களா என்று கேட்டால் இல்லை. இதுவரையில் அதற்கான நீதியும் கிடைக்கப்பெறவில்லை. ஜெனீவா கூட்டத்தொடரிலே இனப்படுகொலை சம்பந்தமான விடயங்கள் சரியான முறையில் கையளிக்கப்பட்டிருந்தால் தமிழ் மக்களுக்கான தீர்வு நிச்சயம் கிடைத்திருக்கும்.