334

சுடர் ஒளி பத்திரிகையின் அலுவலக நிருபர் கைது

சுடர்ஒளி பத்திரிகையின் வவுனியா கிளை அலுவலக நிருபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3மணிநேர விசாரனைளின் பின் விடுதைல செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் (21-05-2015) வவுனியா பகுதியில் புங்குடுதீவு மாணவியின் கொலை கண்டித்து கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு கண்டன நிகழ்வகள் இடம்பெற்றன சுடர் ஒளி பத்திரிகையின் வவுனியா அலுவலக நிருபர் இவற்றினை செய்தி சேகரிப்பதற்க்கா வவுனியா திருநாவற்குளம் பகுதிக்கு சென்று.அங்கு இடம் பெற்ற கண்டன நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த வவுனியா பொலீசார் அவரிடம் இருந்த
புகைப்பட கருவி மற்றும் மோட்டார் சைக்கில் என்பவற்றை பறிமுதல் செய்ததுடன் அவரையும் கைது செய்ய முனைந்த போது. சம்பவம் கேள்வியுற்று அவ்விடத்துக்கு சென்ற வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலார் சங்கத்தின் செயலாளர் ந.கபில்நாத் மற்றும் ஊடகவியலாளர்கள் இவர் எம்முடன் இணைந்து பணியாற்றும் ஊடகவியலாளர் என்று பொலிசாரிடம் உறுதிப்படுத்திய கூறிய போதும் அதனை ஏற்க மறுத்த பொலீசார் அவரை கைது செய்து வவுனியா பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 3 மணிநேரம் விசாரனை மேற்கொணடனர்.

இந்த சம்பவத்pனை கேள்வியுற்ற யாழ் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வவுனியா மாவட்ட பிரதி பொலீஸ் அத்தியட்சகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி ஊடாகவியார் விடுதலை தொடர்பாக தொலைபேசியுடாக உரையாடியதை தொடர்ந்தும் வவுனியா பொலீஸ் நிலையத்திற்குநேரடியாக சென்று பொலீஸ் அதிகாரிகளுடன் ; வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம் உரையாடியதையடுத்து ஊடாகவியாளர் பிற்பகல் 12 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுகந்திரமாக செய்தியாளர்கள் பணியாற்றுவதில் இவ்றான செயற்ப்பாடுகள் ஊடாகவியாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தினை எற்ப்படுத்தியுள்ளது.

SHARE