நாகர்கோவில் வட்டார தமிழ் பேசும் சுகன்யா

635

தமிழ் சினிமாவில் டீச்சர் வேடங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடலோரக்கவிதைகள் படத்தில் நடித்த ரேகா அந்த வேடத்தில் நடித்த பிறகு கோலிவுட்டில் அவருக்கான மரியாதையே அதிகரித்தது. அதேபோல் சமீபத்தில் ஹரிதாஸ் என்ற படத்தில் ஒரு பொறுப்பான டீச்சர் வேடத்தில் நடித்திருந்தார் சினேகா.

தனது கேரியரில் மிக முக்கியமான வேடம் என்பதால், அந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் திருமணம் என்று சொல்லி தேதியை தள்ளி வைத்தார் சினேகா. அந்த அளவுக்கு அந்த கேரக்டர் அவரை இம்ப்ரஸ் பண்ணியதாம்.

இந்த நிலையில், மாஜி கதாநாயகி சுகன்யாவும் தற்போது நாகர்கோவில் சந்திப்பு என்ற படத்தில் ஒரு டீச்சர் வேடத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்து வரும் சுகன்யாவுக்கு இது வெயிட்டான ரோலாம். படிக்கிற காலத்தில் தவறான செயல்களில் ஈடுபடும் சில மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரமாம்.

அதனால் இந்த கேரக்டரின் தன்மையை உணர்ந்து முழு ஈடுபாடு காண்பித்து நடித்து வரும் சுகன்யா, இந்த படத்தில் நாகர்கோவில் வட்டார தமிழில் டப்பிங் பேச உள்ளாராம். அதனால் இப்போது அந்த பகுதிகளில் நடித்து வருபவர், அங்குள்ள மக்கள் பேசும் தமிழையும் உன்னிப்பாக கவனித்து அதன்படியே தானும் பேசி பயிற்சி எடுக்கிறாராம்.

SHARE