கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் எங்களை அனுப்பியது இலங்கை அரசு : மர்ம மனிதன் வாக்கு மூலம்

829

 

மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய

 Gota-and-MR-smiling_CI

இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சூடுபிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம் இந்த மர்மமனிதன் விவகாரம். கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள் புதியதோர் கலவரைத்தை கட்டவிழ்த்து விட ஏவப்பட்டுள்ள இந்த நபர்கள் யார் ? இவர்களை ஏவிவிட்டவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இன்றி விழித்துக்கொண்டிருக்கின்றது எமது சமூகம். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம மனிதன் விவகாரத்தால் இன்று தமது சொந்த வீட்டுக்குள்ளையே நிம்மதியாக தூங்க முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த பதட்ட நிலைமை வெகுவாக காணப்படுகிறதை அவதானிக்க முடிகிறது.

திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை போன்ற மாவட்டங்களில் இந்த மர்ம மனிதனின் அட்டகாசம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களை அண்டி வாழும் தமிழ் ,முஸ்லிம் மக்கள் தமது அன்றாடத்தேவைகளை கூடி நிறைவேற்ற முடியாத அளவு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலமை இன்று ஏற்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயம். ஆண்கள் கம்பு, தடிளோடும் வீதியெங்கும் மின்விளக்குகளை எரியவிட்டும், காவல்காரர்களாக மாறியிருக்கிறார்கள். தனித்திருக்கும் பெண்கள் தமது சொந்தங்களின் வீடுகளை நோக்கி தஞ்சம் புக வைத்திருக்கிறார்கள் இந்த மர்ம மனிதர்கள்.

பெண் மாணவிகளை மாலை நேர வகுப்புக்களுக்கு செல்ல விடாது தடுத்து அவர்களின் எதிர்காலத்தேவைக்கான கல்விக்கு முட்டுக்கட்டடை போட்டிருக்கிறார்கள் இந்த மர்ம மனிதர்கள்… இதுவரை இந்த மர்ம மனிதன் விவகாரத்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டிருக்கின்றன.. கொலைகள் நடைபெற்றிருக்கிறது… ஏராளமானவர்கள் இந்த மர்ம மனிதனின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவசிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அட்டகாசம் இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சினைக்கான சரியான தீர்வை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பும் இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய கடமைப்பாடும் இலங்கை அரசுக்கு இருக்கிறது அல்லவா??.

இருந்தும் இது தொடர்பில் இலங்கை அரசு உரியதொரு பதிலையும் தகுந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எமக்கு ஏற்படுகிறது. அப்படியானால் இந்த மர்ம மனிதர்களை ஏவி விட்டது நிச்சயம் இலங்கை அரசாங்கம் என்பது தெளிவாகிறது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் இருந்தும் இந்த உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியுள்ளது.

மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய

 

மர்ம மனிதன் தொடர்பில் கடந்த நாட்களில் ஊடகங்களில் வெளியாகிய செய்தி ஒன்றை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதாவது மஹிந்தவின் ஆட்சிக்காலம் நீடிக்க வேண்டுமாயின் இரண்டாயிரம் பெண்களின் மார்பில் இருந்து இரத்தம் எடுத்து அதைக்கொண்டு பரிகார பூசை செய்ய வேண்டும் எனவும், அதற்காக இரத்தம் எடுக்க கோத்தாபாயவினால் ஏவிவிடப்பட்டவர்களே இந்த மர்ம மனிதர்கள் என கூறப்பட்டது. இந்த செய்தியினை மஹிந்தவுக்கு வால் பிடித்து திரியும் அரசியல்வாதியோருவர் முற்றாக மறுத்திருந்தார். அப்படியாயின் குறித்த மர்ம மனிதர்கள் குறிப்பாக பெண்களை மட்டும் தாக்குவது ஏன்? பெண்கள் மார்புகளை மட்டும் பதம் பார்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு அந்த அமைச்சர் விளக்க கொடுத்திருக்கலாமே.

n-1 yakka1111

அவ்வாறு செய்யாமல், “மஹிந்தவுக்கு பெண்களின் மார்பிலிருந்து இரத்தம் தேவையென்றால் பெண்கள் வரிசையில் நின்று கொடுப்பார்களாம்” என வக்காளத்து வேற வாங்குகிறார் அந்த அமைச்சர். அந்த அமைச்சரிடமோ அல்லது இவர்களை ஏவி விட்ட இலங்கை அரசாங்கத்திடமோ நாம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறோம். அதாவது 30 வருடங்கள் தமது அரசாங்கத்தையும் சர்வதேசத்துக்கும் சவால் விட்டுக்கொண்டிருந்த தமிழினத்தின் தலைவன் பிரபாகரனையும் அழித்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் உங்களால் பெண்களை தாக்கும் கோழைத்தனமான செயலில் ஈடுபடும் இந்த மர்ம மனிதர்களை பிடிக்க முடியாமல் இருப்பது ஏன்? புலிகளை அழிக்க முடிந்த உங்கள் படைகளால் மர்ம மனிதனை பிடிக்க முடியாமல் இருப்பது ஏன்? அப்படியாயின் இதன் பிண்ணணியில் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என்பது உண்மை அல்லவா?

மக்களுக்கு இருக்கும் விழிப்புணர்வும் தைரியமும் இலங்கை அரசுக்கு இல்லை என்கின்ற விடயம் மர்ம மனிதர்கள் பலர் மக்களால்தான் பிடிபட்டான் என்கின்ற சம்பவங்களால் புலனாகிறது. மக்களே மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாயின் இலங்கை அரசாங்கம் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் பொலீசார் எதற்கு இராணுவம் எதற்கு? நாட்டின் பல்வெறு பகுதிகளில் பிடிபட்ட மர்ம மனிதர்கள் சிங்கள மொழி பேசுபவர்களாகவும் முன்னாள் இராணுவ வீரர்களாவும் ஊர்காவத்துறை வீரராகவும் காணப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள. அவர்களை கைது செய்த பொலீசார் அவர்களை நீதிக்கு முன் நிறுத்தாமல் விசாரணை என்ற பெயரில் பதுக்கி வைத்திருக்கும் மர்மம் என்ன?

அவ்வாறாயின் மர்ம மனிதர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை காப்பாற்றுபவர்கள் நீங்கள்தான் என்பதும் அவர்களை ஏவி விட்டது உங்கள் அரசு என்பது புலனாகிறது. இது பொய் என்றால் மர்ம மனிதர்கள் மறைந்திருந்த வீட்டுக்குள் பொலீசாரின் தொப்பிகள் மற்றும் துப்பாக்கி சீருடை போன்றவை வந்தது எப்படி என்ற கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும். இன்னுமொரு விடயம் என்னவென்றால் இந்த மர்ம மனிதன் தொடர்பில் அண்மையில் பொலிஸ்மா அதிபர் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள் எமக்கு ஒரு கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

ஆடமாட்டாதவன் அரங்கம் கோணல் என்றானாம் என்பதைப்போல.. மர்ம மனிதனை பிடிக்க துப்பில்லாத அவர் அது ஒரு கட்டுக்கதை எனவும் பொய் வதந்தி எனவும் கதை விடுகிறார். அப்படியாயின் மர்மமனிதர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருக்கும் பலரது நிலைமைகள் இவரது கண்ணுக்கு தெரியவில்லையா என்ன?? இதை வைத்துப்பார்க்கும் போது தமது அரசாங்கம் செய்யும் தவறை மூடிமறைக்கும் பொலீசாரின் செயற்பாடு தெளிவாகிறது.

இறுதியாக ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகிறோம். இந்த மர்ம மனிதன் தொடர்பாக இறுதியாக வெளிவந்த ஒரு செய்தி மர்ம மனிதர்களா சீனர்களும் நடமாடுவதாக.. இந்த செய்தியும் பலரின் சந்தேகத்தக்கு இடமாக மாறியுள்ளது. காரணம் மஹிந்த அண்மையில் சீனாவுக்கு சென்று வந்தமையே ஆகும். இது எல்லாம் சர்வதிகாரி மஹிந்த போட்ட திட்டத்தின் அடிப்படையில் தான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பது தெட்டத்தெளிவாகிறது.

மஹிந்த இத்திட்டத்தை போட்டதன் முக்கிய காரணங்களாக பல காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதாவது சர்வதே நாடுகள் புலிகளை அழித்து விட்டால் இலங்கையில் இருக்கும் அவசரகாலச்சட்டத்தை நீக்கும் படி தொடர்ந்து அழுத்தும் கொடுத்து வருகின்றது. இதனை தொடரந்து வைத்திருக்க வேண்டுமாயின் நாட்டில் ஏதாவது ஒரு அச்சுறுத்தல் தேவை அதற்காக ஏவி விடப்பட்டவர்களே இந்த மர்ம மனிதர்கள். மற்றுமொரு விடயம் என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலப்பகுதியில் இருந்த பாரிய படை முகாம்கள் தற்போது அகற்றுப்பட்டுள்ளன. மீண்டும் இவ்வாறான முகாம்களை உருவாக்குவதற்காகவே மர்ம மனிதர்கள் ஏவி விடப்பட்டார்கள்.

இது மாத்திரமின்றி மஹிந்த அரசு அவசரகாலச்சட்டத்தை முற்றாக நீக்கினால் கூட இந்த மர்ம மனிதன் விவகாரங்களை பயன்படுத்தி பயங்கரவாதச்சட்டத்தை உள்நுழைக்கும் முகமாகவும் ஆலோசித்து இந்த மர்ம மனிதர்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றை நிலமையில் இலங்கையில் இடம்பெறும் இந்த மர்ம மனிதன் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிவக்கு இலங்கை ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

எனவே இது முற்று முழுதாக இது மஹிந்தவின் திட்டமே. யுத்தம் என்று போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவிந்த பேரினவாதி மஹிந்த தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன்னுமொரு இன அடக்கு மறை அல்லது இன அழிப்பு திட்டமே இந்த மர்ம மனிதர்கள் என்பதை எம் தமிழ் பேசும் உறவுகள் நன்கு உணர்ந்துகொண்டுள்ளர். எவ்வாறாயினும் உண்மைகள் வெகுநாள் உறங்குவதில்லை என விழிப்புடன் காத்திருப்போம்: மர்ம மனிதன் பற்றி மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட பல உண்மைகளை இலங்கை அரசு வெளியிடவேண்டும். இல்லையேல் இதற்கான சூத்திரதாரிகள் நீங்கள் தான் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

SHARE