உதடுகள் பொலிவு பெற இதை தடவவும்

346
இதை பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையும்..

இதை பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையும்..
வெப்பத்தின் காரணமாக புற ஊதாக்கதிர் வீச்சுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்களின் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத்தொடங்கும். ஒருசில சமையல் பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை இயல்பான நிறத்திற்கு கொண்டுவந்துவிடலாம். உதடுகளில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

உதட்டில் படர்ந்திருக்கும் கருமையை போக்குவதில் தேனுக்கும் முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உதடும் மிருதுவாகி விடும். எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும். பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம். அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும். ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம்.

உதடு வறட்சி, உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைக்கு ஐஸ்கட்டிகள் நிவாரணம் தரும். அவை உதட்டில் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடு பொலிவுக்கு வித்திடும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜூஸ் சேர்த்து உதட்டில் தடவிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஆலிவ் ஆயிலும் உதட்டு பொலிவுக்கு உதவும்.

SHARE