அலுவலகத்தில் டென்ஷனா?

693
அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.

எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம் எவ்வளவு வேலை இருந்தாலும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர முடியும். அலுவலகத்தில் ஏற்படும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர சிலவழிமுறைகளை பார்க்கலாம்…

டென்சன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்சனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.

அனைவரும் காபி குடித்தால் டென்சன் குறையும் என்று நினைத்து அவ்வப்போது காபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காபி குடித்தால் டென்சன் தான் அதிகரிக்கும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைனானது மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனை குறைக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.

மனமானது அமைதியிழந்து இருக்கும் போது தியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் தியானம் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து மனமானது அமைதியடையும்.

டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.

 

SHARE