இணுவில் பகுதியில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது….

307

 

யாழ்ப்பாணம்- இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள், கடந்த 3ஆம் திகதி அதிகாலை மூன்று பேர் கொண்ட கொள்ளை கும்பலொன்று, அத்துமீறி வீட்டினுள் நுழைந்து,  வீட்டில் இருந்தவர்களுக்கு கோடாரியை காட்டி பயமுறுத்தி 21 பவுண் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்று இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  தாவடி பகுதியை சேர்ந்த 26 வயதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக சுன்னாக பொலிஸாரிடம் புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

SHARE