ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது – ராகுல் காந்தி

281

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீநகர் பகுதியில் பாடசாலை ஆசிரியர்கள் இருவரை பயங்கரவாதிகள் சுட்டுகொலை செய்தமை குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்த தனது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘காஷ்மீரில் வன்முறை சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தமை ஆகியவற்றால் அங்கு பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்துவிடவில்லை.

பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. காஷ்மீர் சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்லைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE