மூன்று நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

281

நேபாளம், வங்கதேசம், மியன்மாருக்கு கொவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நேபாளம், மியன்மார், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தலா 10 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரச அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம் ஈரானுக்கு 10 இலட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE