பெண்ணை தரக்குறைவாகத் திட்டியதாக திரைப்பட நடிகை சங்கீதா மீது போலீஸார் வழக்குப் பதிவு

611

வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன். இவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் ஆலோசகராகப் பணியாற்றியவர். இவரது வீட்டின் அருகே நடிகை சங்கீதா (பிதாமகன், உயிர், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

உஷா சங்கர நாராயணன், தனது வீட்டில் நான்கு தெரு நாய்களை பராமரித்து வருகிறார். இந்த நாய்களால் தொல்லை ஏற்படுவதாக நடிகை சங்கீதா, உஷா சங்கர நாராயணனிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடிகை சங்கீதா, உஷாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை சங்கீதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சங்கீதா தரப்பிலும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE