போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கடத்தல் – அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி…

299

ஹெய்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி தெரிவித்துள்ளது.

அனாதை இல்லத்தை விட்டு வெளியேறும்போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயுதக் கும்பலால் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அரசாங்கம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ஹைட்டி தலைநகரின் ஏழ்மையான மாவட்டங்களை ஆயுதக் குழுக்கள் பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தியுள்ளன. சமீபத்தில் அவர்கள் போர்ட்-ஓ-பிரின்ஸின் புறநகர் பகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டாய் விட 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட கடத்தல்கள் பதிவு செய்யப்பட்டன.

SHARE