ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்….

300

16 அணிகள் பங்கேற்கும் ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது.

இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 தடவையும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தலா ஒவ்வொரு முறையும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளன.

இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி காண் சுற்றில் விளையாடவுள்ள நிலையில் அதிலிருந்து 4 அணிகள் ‘சுப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

இந்நிலையில் ஆரம்ப நாளான இன்றைய தினத்தில், ஓமான் மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய அணிகளும் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் மோதவுள்ளன.

SHARE