மேல் மாகாணத்தில் பண்டிகைகளை முன்னிட்டு விசேட பொலிஸ் நடவடிக்கை…..

304

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட தினத்தை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளருமஇ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

SHARE