நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த இளைஞன்…

305

தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து, தற்கொலை செய்வதைப் போன்று நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன், குறித்த சம்பவத்தினாலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை, யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றுகின்றவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளார்.

குறித்த சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE