வவுனியாவில் நீர்வழங்கல் வசதிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்!

329

வன்னிமாவட்டங்களின் நீர்வழங்கல் வசதிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம், வவுனியா மாவட்டசெயல வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முதன்மை அதிதியாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்துகொண்டார்.

கலந்துரையாடலில் வன்னிமாவட்டங்களின் நீர்வழங்கல் திட்டத்தின் முன்னேற்றநிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையால் செயற்ப்படுத்தப்படவிருக்கும் சுகாதாரமேம்பாட்டுத்திட்டம் மற்றும் மூன்று மாவட்டங்களிலும் நீர்வழங்கலில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா,வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர்மஸ்தான், கு.திலீபன், றிசாட் பதியூதீன்,சாள்ஸ் நிர்மலநாதன், மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் கலந்துகொண்டனர்

SHARE