மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் மாணவர்கள் போராட்டம்! – கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்….

294

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் மூன்று ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணி வகித்த 3 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு பழிவாங்கல் செயற்பாடு என தெரிவித்து குறித்த பாடசாலையில் ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அதிபரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலைக்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கால அவகாசம் ஓடிய நிலையிலும் அதனை புறக்கணித்து தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டம் காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் காரணமாக பாடசாலை வளாகத்தில் பதட்ட நிலை காணப்படுகின்றது.

Gallery Gallery

SHARE