தேவையான பொருட்கள்
பூண்டு – கால் கப்
தேங்காய் துருவியது – கால் கப்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.
அடுப்பை அணைத்து தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
ஆறியதும் மிளகாய் தூள், உப்பு, பூண்டு, தேங்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.
இப்போது சூப்பரான பூண்டு பொடி ரெடி.
காற்று புகாமல் பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.