தேவையான பொருட்கள் :
துருவிய பீட்ரூட் – 1 கப்
பால் – 1 1/2 கப்
முந்திரி – 5
நெய் – 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
கடாயை சிறு தீயில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் துருவிய பீட்ரூட்டை கொட்டவும். பச்சை வாசம் நீங்கும் வரை நன்கு வதக்கவும்.
பின்பு அதில் பால் ஊற்றி ஏலக்காய் தூள், முந்திரி, நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
பால் சுண்டும் வரை கிளறி அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.
சூப்பரான பீட்ரூட் அல்வா ரெடி.