இந்த வகை ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் ஸ்டிரெய்ட் கட் ஜீன்ஸ்களி ன் கலவை ஆகும். இடுப்பு மற்றும் தொடை பகுதியை அணைத்தவாறும், கணுக்கால் பகுதியில் சிறிது தளர்வாகவும் இருக்கும். இணிவதற்கு சவுகரியாக இருக்கும். அனைத்து வகை டி-ஷர்ட்களுக்கும் பொருந்தும்.
ஸ்கின்னி ஜீன்ஸ்
பார்க்க ஒல்லியாக தெரிந்தாலும் உடுத்துவத்ற்கு சவுகரியமாக இருக்கும் வகையில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடுப்பில் இருந்து கணுக்கால் வரை அணைத்தபடியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் இழுவை தன்மையால் உடல் அசைவிற்கு ஏற்றார் போல் இருக்கும். ஹீல்ஸ் போன்ற காலணிகளோடு சேர்த்து அணிவதற்கு ஏதுவாக இருக்கும். நீளமான கால்கள் உடைய பெண்களுக்கும், ஒல்லியான உடலமைப்பு உடைய பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
பூட் கட் ஜீன்ஸ்
பூட்ஸ் போன்ற காலணிகளுடன் அணிவதற்கு இது ஏதுவாக இருக்கும். இடுப்பில் இருந்து தொடை வரை சற்று பிடித்தவாறும், முழங்காலில் இருந்து சிறிது அகலமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து உடல் அமைப்புக்கும் பொருத்தமான ஒன்றாகும்.
ஹைய் ரைஸ் ஜீன்ஸ்
இதன் வடிவமைப்பு இடுப்பிற்கு மேல் அணிவது போல் அமைந்திருக்கும். இந்த வகை ஜீன்ஸ்கள் உயரம் குறைந்த பெண்கள் மற்றும் சற்று தடித்த உடல்வாகுவான பெண்கள் மத்தியில் பிரபலமானது. இது கால்களை உயரமாகவும், தொப்பையை மறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஸ்ட்ரெய்ட் லெக் ஜீன்ஸ்
இடுப்பில் இருந்து கணுக்கால் வரை நேராக இருக்கும் இது அனைத்து வகை உடல்வாகு கொண்டவர்களுக்கும் பொருந்தும். அணிபவரை உயரமாக காண்பிக்க வல்லது. இந்த வகை ஜீன்ஸ்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏதுவாக இருக்கும்.
லோ ரைஸ் ஜீன்ஸ்
இந்த வகை ஜீன்ஸ்கள் வெய்ஸ்ட் லைனில் இருந்து சற்றே இறங்கி இருந்தாலும், அனைத்து வகையான கேஷீவல் உடைகளுடனும் ஒன்றிப்போகும்.
பாய் பிரண்ட் ஜீன்ஸ்
இது ஆண்கள் அணிவது போல் சவுகரியமாக இருக்கும். ஆகையால் இதற்கு பாய் பிரண்ட் எஜீன்ஸ்ன்ற பெயர் வந்தது. இந்த வகை ஜீன்ஸ்க்ள் கால்களில் பாகி போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், இடுப்பை சுற்றி சற்று இறுக்கமாகவே இருக்கும்.
பெலட் ஜீன்ஸ்
இடுப்பு பகுதியை மட்டும் அணைத்தவாறு முழங்காலில் இருந்து அகன்று விரிந்து இருக்கும். இது எந்த வகை உடலுக்கும் பொருத்தமான ஒன்றாக தோன்றினாலும், அகலமான தோள்பட்டை உடையவர்கள் அல்லது குறுகிய இடுப்பு பகுதி கொண்ட பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மிட் ரைஸ் ஜீன்ஸ்
இது வெய்ஸ்ட் லைன் என்று சொல்லப்படும் இடுப்பு பகுதியில் இருந்து ஆரம்பம் ஆகும். இந்த வகை ஜீன்ஸ்கள் அணிவதற்கு சவுகரியமாகவும், இடுப்பு பகுதியை சற்றே அகலமாக காண்பிக்கும் வகையிலும் இருக்கும்.