சந்திரிகா தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி..

314

எதிர்வரும் நாட்களில் கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றமொன்று ஏற்படவுள்ளதாகவும்,சந்திரிக்கா அமைக்கவுள்ள புதிய கூட்டணியில் அரசிலுள்ள  அமைச்சர்கள் பலர்  இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Bandaranaike Kumaratunga) தலைமையில் இன்று அவரது தந்தை பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha),இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க(Vidura Wickremanayake) மற்றும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா(Anura Priyadarshana Yapa) ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், சந்திரிக்கா அமைக்கவுள்ள புதிய கூட்டணியில் அரசிலுள்ள பல அமைச்சர் இணையக்கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

SHARE