யாழ்.நாவற்குழியில் கார் விபத்து – ஒருவர் படுகாயம்!

287

யாழ்.நாவற்குழி பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன், கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நாவற்குழி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் படுகாயமடைந்த கார் சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE