ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

310

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் ஆகியோரை இன்று (ஞாயி்றுக்கிழமை) சந்திக்கவுள்ளார்.

இதன்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிக்கும் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும், வரலாற்று சிறப்புமிக்க இறப்பர்- அரிசி உடன்பாட்டின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

SHARE