கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் தனக்கு கிடைத்த 02 வாகனங்களை வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியிடம் மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குற்றம் சுமத்தும் வகையிலான கடிதத்துடனே வாகனத்தை ஒப்படைத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ஒரு அரசியல் கூட்டாளி அல்ல எனவும் அவர் ஒரு போட்டியாளர் எனவும் அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் வேட்புரிமை வழங்க முடியாதென தெரிவித்தமையினாலே இவ்வாறான ஒரு நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னார் ஜனாதிபதியை தகாத வார்த்தைகளினால் திட்டியதோடு கட்சி தலைமை பதவியில் இருந்து விலகுமாறும் வாசுதேவ நாணயக்கார கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.