துரையும், தண்டாவும் கிழக்கிற்கு சாபக்கேடாம். கௌரவ இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களே !

373

அன்புள்ள கௌரவ இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களே !

East-Menester

உங்களுக்கு கிழக்கு மாகாண தமிழன் நான் ஒரு அதிபர் எழுதும் மடல்… யாரையும் குற்றம் சுமத்தவோ அவமதிக்கவோ இதை எழுதவில்லை.

கடந்த கிழக்கு மாகாண சபையில் உரிமையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து ஆதரவு வழங்கியவன் என்ற வகையில் தற்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சரான தண்டாயுதபாணியும்,விவசாய அமைச்சரான துரைராஜசிங்கமும் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடாகவே அவர்களின் செயற்பாடுகள் உள்ளன.

இவர்கள் பதவி ஏற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பல வரவேற்பு விழாக்களிலும் விளையாட்டு விழாக்களிலும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டுவதும், மகஜர்களை வாங்குவதிலும், புதன்கிழமைகளில் திருமலை காரியாலயத்தில் நித்திரை செய்வதையுமே காண்கின்றோம்.

குறிப்பாக ஆசிரியர் இடமாற்றம் அதிபர்களின் விடயங்களை மனம் திறந்து பேசி அதற்கான தீர்வுக்காக அவர்களை நாடினால் அதை தட்டிக்களிப்பதும் இழுத்தடிப்பதையும் எங்களால் நேரடியாக காணமுடிந்தது.

இது விடயமாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பலமுறை கூறிய போது அவர்கள் தொலைபேசி எடுத்தாலும் அமைச்சர்கள் இருவரும் கதைப்பதில்லை என்பதை எங்களுக்கு முறையிட்டனர்.

விவசாய அமைச்சரான துரைராச்சிங்கம் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளராகவும் உள்ளார், ஆனால் இவர் கட்சி தொடர்பான எந்த அக்கறையும் இல்லை முதலமைச்சரை புகழ்வதிலும் இன ஒற்றுமையென கதைத்து , இருக்கும் தமிழ் தேசிய உணர்வுகளையும் மளுங்கடிப்பதும் அவரின் உறவுனர்களுக்கு வேலை வழங்குவதுமே இவரின் செயற்பாடாகும்.

கல்வி அமைச்சர் காலத்தை வீணடித்து எமது தமிழ் பாடசாலைகளின் வெற்றிடங்களைக்கூட நிரப்ப முடியாத ஆமாசாமியாக இருப்பதை பார்த்து அதிபரகளான எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

வலயகல்விப்பணிப்பாளர்கள் இவரின் பலவீனத்தை நன்குணர்ந்து சில நிகழ்வுகளுக்கு எடுத்து மாலையும் பொன்னாடையும் அணிவித்துவிட்டு அவர்களின் பழைய பல்லவிகளை செய்கின்றனர்

இந்த விடயம் தொடர்பாக ஏனைய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஷ்ணபிள்ளை, பிரசன்னா, நடராசா, கருணாகரம்.

துரைரெட்ணம்,கலையரசன்,இராசேஷவரன் ஆகியோரிடம் முறையிட்டபோதும் அவர்களுக்கு “குரைத்து வாற நாய்க்கு எலும்புத் துண்டை கொடுப்பது போல் ” சில சலுகைகளை பெற்றுக்கொண்டும் அவர்களின் உறவினர்களின் இடமாற்றம் வேலைவாய்ப்பு கிடைத்தால் அதுதான் தமிழ்தேசியம் என நினைத்து பின்வாங்குகிறனர்.

இதைவிட அந்த கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அனைவரும் தம்மை விழாக்களுக்கு எடுத்து மாலைஅணிவித்து பேசவிட்டால் போதும் என்ற வகையில் ஒவ்வொருவரும் அவர்களுக்குள்ளே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதையும் நேரடியாக எம்மால் காணமுடிகிறது.

தலைவர் சம்மந்தன் ஐயாவிடம் பலமுறை கதைத்தோம் உங்களிடம் கூறுமாறு பணித்தார் உங்களுடமும் கடிதம் எழுதினோம் பதில் இல்லை மனவேதனை தாங்கமுடியாமலும் எமது தமிழ்தேசிய உணர்வை புரிந்துமே இந்த பகிரங்கமான மடலை எழுதியுள்ளேன்.

இவ்வாறு எழுதுவது பிழையாக தென்பட்டாலும் எமது கட்சியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டே எழுதியுள்ளேன் இனிமேலாவது அவர்களின் செயற்பாடுகள் மாற்றம் அடைந்தால்அது எமது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்

நீங்கள் உடன் தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் நாங்கள் வாக்களித்தது எமது உரிமைக்காகவும் சிற்சில செய்ய கூடிய விடயங்களை நிறைவேற்றவுமே அமைச்சர் பதவி கிடைத்ததும் இவர்கள் இருவரும் குறைந்த பட்சம் தொலைபேசியிலாவது கதைக்க முடியாத இவர்களை எப்படி மக்கள் பிரதிநிதிகளாக நாம் ஏற்கமுடியும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பதவி கிடைத்தால் வாக்களித்த மக்களை மறந்து உறவினர்களுக்கு மட்டும் உதவும் இந்த சந்தர்பவாத அமைச்சர்களை எதிர்காலம் பதில் சொல்ல முன் உங்களால் திருத்தமுடியுமா? என்பதை அறியத்தாருங்கள்.
நன்றி
இங்ஙனம்

உணர்வுள்ள அதிபர்கள் சார்பாக பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டக்களப்புEast-Menester

SHARE