விலங்கு இராச்சியத்தில் உள்ள பல்வேறு வகையான குரங்குகளின் சிம்பன்சிக்களே மனிதனை மிகவும் ஒத்ததாக காணப்படுகின்றது.இவ் ஒற்றுமையானது உருவத்தில் மட்டுமல்லாது செயற்பாடு மற்றும் சிந்தனைத் திறனிலும் மனிதனை ஒத்ததாகவே இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
இதற்கு சான்றாக சிம்பன்சிகள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ண விரும்புவதாக அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிம்பன்சிகளிடம் சமைக்கும் சாதனங்களையும், துண்டு துண்டாக வெட்டப்பட்டு சமைத்த தக்காளிப் பழங்களையும் வழங்கியுள்ளனர்.
ஆனால் ஏற்கணவே சமைக்கப்பட்டிருந்த தக்காளிப் பழங்களை மீண்டும் தாமே சமைப்பதற்கு சிம்பன்சிகள் முயற்சித்துள்ளன.
இதன் மூலம் சிம்பின்சிகள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து சாப்பிட விரும்புவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. |