கைதிகளை தனித்தனியாக அவதானித்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் – நாமல்ராஜபக்ச

351
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேசசக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என  நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு பிரச்சினைகள் எழாது என குறிப்பிட்டுள்ள அவர் சிறைக்கைதிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்துவேன் என ஜனாதிபதி தனது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்க தீர்மானித்துள்ளோம்,நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யப்போகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
கைதிகளை தனித்தனியாக அவதானித்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக பல நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன இதன் காரணமாக இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
SHARE