நாட்டில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்
துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 4ஆண்களும், ஒரு பெண்ணுமாக 5 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 ஆண்களும் 12 பெண்களுமாக 26 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 754 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.