வருடா வருடம் புதிதாக உருவாக்கப்படும் ரோபோக்களை அறிமுகம் செய்வதற்கு DARPA எனும் நிகழ்ச்சி நடாத்தப்பட்டு வருகின்றது.இந்த வருடம் இடம்பெறவுள்ள DARPA நிகழ்வில் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பிடிப்பதற்கு தயாராகிவருகின்றது RoboSimian எனும் ரோபோ.
இந்த ரோபோவானது 2013ம் ஆண்டில் டிசம்பர் மாதம் இடம்பெற்ற DARPA நிகழ்வில் முதன் முறையாக சோதனைப் போட்டியில் கலந்து கொண்டிருந்தது. மேலும் இந்த ரோபோ உருவாக்கத்தின் போது மூட்டுக்கள், கைகள், இடத்துக்கு இடம் நகர்தல், இலகுவாக கையாளக் கூடிய வகையில் இருத்தல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. |