ஐ.நா விசாரணைக் குழுவில் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளார்!

348

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Chandrakanthan-tna-080415-seithy Nadesan-e1432649392468

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வன்னி இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் தங்கியிருந்த அவர், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு தேனீர் வழங்கி சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புலித்தேவனுடன் சந்திரநேரு மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவை ஆதாரம் காட்டி சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

SHARE