சுய மரியாதை இருப்பின் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

323
சுய மரியாதை இருப்பின் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

Mahinda-150x150

வெலிகந்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்கள் காணப்பட்ட கொடூர யுகத்தை நாங்கள் மாற்றியமைத்தோம். இந்த சுதந்தரத்தை அனுபவிக்கும் சிலர் சிறிது காலம் சென்ற பிறகு அதனை மறந்து விடுவார்கள்.

நான் முதல் முறை யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது கறுப்பு கொடியை உயர்த்தினார்கள். எனினும் இரண்டாவது முறை செல்லும் போது உயர்த்தவில்லை.

குறைந்த பட்சம் புலிகளை தோற்கடித்த பின் நான் யாழ்ப்பாணம் செல்லும் போது கூட யாரும் எனக்கு கறுப்பு கொடியை உயர்த்தவில்லை.

தற்போது சில பிரதேசங்களில் எனக்கு எதிராக கறுப்பு கொடி உயர்த்துவது யாருடையதோடு அவசியத்திற்காக செயற்படுத்தப்படுவதாகும். எனினும் அதனை நான் கண்டுக்கொள்வதில்லை.

தமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியானால் அது பெருமை, மக்களின் ஆதரவு, எனினும் மக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கவில்லை.

எனவே இந்த அரசாங்கத்திற்கு சொல்கின்றோம் அனைத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், ரணிலுக்கு மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ளுங்கள் அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை. ரணில் மக்கள் ஆதரவை முதலில் பெற்றுக்கொள்வது அவசியம். ரணிலுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து மக்களுக்கு தெரியும்.

எனவே முதுகெலும்பு உள்ள சுய மரியாதை உடைய ஒருவர் என்றால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE