10 நிமிடத்தில் செய்யக்கூடிய பிரெட் பீட்சா

365
10 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் பீட்சா

பிரெட் பீட்சா
தேவையான பொருட்கள்

பிரெட் – 2
3 நிற குடைமிளகாய் – தேவையான அளவு
வெங்காயம் – தேவையான அளவு
சீஸ் (mozzarella cheese) – விருப்பத்திற்கேற்ப
பீட்சா சாஸ் – 2 டீஸ்பூன் ( கடைகளில் கிடைக்கும்)
உப்பு – சுவைக்கு
பட்டர் – 2 டீஸ்பூன்
ஆர்கனோ (oregano) – கால் டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – விருப்பத்திற்கு

செய்முறை

குடைமிளகாய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சீஸை (mozzarella cheese) துருவிக்கொள்ளவும்.

ஒரு பிரெட்டை எடுத்து அதன் மேல் பட்டரை தடவி மறுபக்கத்தில் பீட்சா சாஸை தடவவும்.

பின்னர் அதன் மேல் துருவிய சீஸை (mozzarella cheese) தூவி விடவும்.

அதன் மேல் குடைமிளகாய், வெங்காயத்தை அடுக்கவும்.

பின் அதன் மேல் உப்பு, ஆர்கனோ (oregano), சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள் தூவவும்.

தோசை தவா சூடானதும் அதன் மேல் பிரேட்டை வைத்து மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.

இப்போது சீஸ் நன்றாக உருகி பிரெட் முழுவதும் பரவி இருக்கும்.

சூப்பரான பிரெட் பீட்சா ரெடி.

SHARE