மாதவிடாய் காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்….

422
மாதவிடாய் காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்....

மாதவிடாய் காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்….
மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு மட்டுமின்றி தசைப்பிடிப்பு, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அந்த சமயத்தில் உடலுக்கும், மனதுக்கும் முழு ஓய்வு தேவைப்படும்.

உடற்பயிற்சி மீது நாட்டம் கொண்டவர்கள் கூட உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புவார்கள். அப்படி அறவே உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டியதில்லை. கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

தவிர்க்க வேண்டிய பயிற்சிகள்:

தலைகீழ் யோகா: மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத சில பயிற்சிகளும் இருக்கின்றன. இந்த சமயத்தில் யோகா சிறந்த பயிற்சியாக கருதப்பட்டாலும் தலைகீழ் யோகா போன்ற நுட்பமான யோகா வகைகளை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்வது ரத்த நாளங்களின் செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாஸ்குலர் அமைப்பும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக கருப்பையிலிருந்து ரத்தத்தை எடுத்து செல்லும் செயல்பாடுகளில் சிக்கல் நேரும்.

கடுமையான உடற்பயிற்சி: அதிக எடை கொண்ட உபகரணங்களை தூக்குவது முதல் விறுவிறுப்பான நடைப்பயிற்சி வரையிலான கடினமான பயிற்சிகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்யும்போது உடல் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும். ஏற்கனவே உடலில் ஒருவித சோர்வு காணப்படும் நிலையில் மிதமான உடற் பயிற்சிகளை செய்வதுதான் நல்லது.

SHARE