* போதுமான அளவு தண்ணீர் பருகுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிகப்படியான வியர்வை காரணமாக ஏற்படும் நீரிழப்புகளில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
* ஓட்ஸ், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், வியர்வையைக் குறைக்கவும் செரிமானம் உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்க உதவும். ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அது உடலில் வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்கும். வியர்வையையும் கட்டுப்படுத்தும்.
* ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் வியர்வை அளவை குறைக்க உதவும். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள இயற்கையான வாசனை உடலால் உறிஞ்சப்பட்டு, சருமத்திற்கு புதிய வாசனையை ஏற்படுத்தும்.
* செலரி, வெள்ளரி, கீரை, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுள் நீர்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். வியர்வை அளவைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும்.
* கோடை காலத்தில் கிரீன் டீ பருகுவது எதிர்மறையாக தோன்றலாம். ஆனால் கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. நரம்பு மண்டலத்தை குளிர்ச்சியாகவும், வியர்வையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அவை உதவும்.