வெளியே செல்லும் போது முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக என்னென்ன உத்திகளை பின்பற்றலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
* முக அமைப்பு சருமத்தின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் வேறுபடக்கூடும். ஆகையால் அதன் அடிப்படையில் சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
* முகத்தை கழுவி தூய்மை செய்து முடிந்ததும் சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் விரிவடையும். இவற்றை மூடுவதற்காக முதலில் பன்னீர் டோனர் கொண்டு முகம் முழுவதும் நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்
* முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாதவாறு மேக்கப் போடுவதற்கு ஜெல் மற்றும் கிரீம் கலந்த வாட்டர் பேஸ்டு மாய்ஸ்சுரைசர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* முகத்தில் மாய்ஸ்சுரைசர் தடவியதற்கு பின்பு ஜெல் மற்றும் கிரீம் கலந்த ப்ரைமர் தடவுவது சிறந்தது.
* அடுத்ததாக கன்சீலர் பயன்படுத்த வேண்டும். இதை சருமத்தின் தன்மையை பொறுத்து அதற்கு ஏற்றவகையில் தேர்வு செய்வது முக்கியமானது. டோனர், மாய்ஸ்சுரைசர் போன்றே இதுவும் ஜெல் மற்றும் கிரீம் கலந்த வகையாக இருக்கலாம்.
* பின்பு பவுண்டேஷன் தடவ வேண்டும். முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாதவாறு மேக்கப் போடுவதற்கு பவுண்டேஷன் லிக்விட் ஃபார்மில் இருக்க வேண்டும்.
* இவற்றையெல்லாம் சரியான முறையில் செய்த பிறகு பவுடர் பூசிக்கொண்டு மேக்கப்பை செட் செய்ய வேண்டும். இதற்கு டிரான்ஸ்லுசென்ட் பவுடரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காம்பேக்ட்டு பவுடரை தவிர்க்க வேண்டும்.
* உதட்டில் தடவிக்கொண்ட லிப்ஸ்டிக் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக லிக்விட் வகையிலான லிப்ஸ்டிக் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* லிக்விட் லிப்ஸ்டிக் இல்லாதபோது ஃபவுண்டேஷன் மற்றும் டிரான்ஸ்லுசென்ட் பவுடரை உதட்டின் மேல் கொஞ்சமாக தடவிக்கொண்டு பின்பு அதன் மேலேயே லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.
மேற்கண்ட முறைகளை கையாளும் போது முகத்திற்கு போடும் மேக்கப்பும் உதட்டு சாயமும் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளும் பிரச்சனை ஏற்படாது.