இனப் படுகொலை என்ற பேச்சிற்கே இனி இடமில்லை. அமைச்சுப் பதவிகளை வழங்கித் தமிழ்த் தரப்பை முடக்க அரசு திட்டம்.

302

 

1958ம் ஆண்டு ஆரம்பமான இனக்கலவரத்தில் ஆரம்பித்தது 1970 இன் நடுப்பகுதியில் இடையிட்டும் 1980களில் இறுதியாகவும் தொடர்ந்து இடம்பெற்ற வந்த இனப்படுகொலைகளில் பெருந்தொகையான தமிழ் மக்கள் இப்படுகொலைக்கு ஆளாகினார்கள்.
1980களில் ஆரம்பமான ஆயுதப்போராட்டத்தின்போது அடக்குமுறையாளர்களின் பல்வேறுபட்ட கொடிய தாக்குதல்களினால், தமிழ் மக்கள் பெருமளவில் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டனர்.

C.V_CI 02_ORF_KVS.JPG mavai-senathirajah-300x200

இறுதியாக இடம்பெற்ற வன்னி நடவடிக்கையின்போது தமிழ் மக்கள் மிகப் பெருமளவில் வவுனியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது புலிகளை ஒழிக்கிறோம் என்னும் போர்வையில் தமிழ் மக்கள் மிகப் பெருமளவில் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளானார்கள்.
தற்போது மைத்திரி ஆட்சிபீடமேறுவதற்கு உறுதுனையாகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட சில நபர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தமிழர் தரப்பினரை அரசு முடக்கத் திட்டம் இருக்கிறது. எனவே இத்திட்டத்திக்கு தமிழர் தரப்பினர் எவரும் துணைபோகாது மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்.
அரசின் இத்திட்டத்தைத் தோல்வியுறச் செய்வதோடு தமிழ் இனப்படுகொலைக்கு இனி ஒரு போதும் ஆளாகமாட்டோம் என்னும் வீர சபதத்தைத் தமிழ் மக்கள் தமக்குள் நிலை நிறுத்தவேண்டும்.

SHARE