மொபைல் சாதனங்களின் உதவியுடன் எடுக்கப்படும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு உணவுகளிலுள்ள கலோரிகளின் அளவை துல்லியமாக சொல்லக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
Al எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் முதலில் உணவின் வகையினை அறிந்து கொள்வதுடன் அதற்கு அடுத்தபடியாக உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு கலோரிகளின் அளவை கண்டறிகின்றது.
இதற்கு HD தரத்திலுள்ள புகைப்படங்கள் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் உணவுகளின் கலோரிகளைக் கண்டறியும் ஏனை அப்பிளிக்கேஷன்களை விடவும் இந்த அப்பிளிக்கேஷன் துல்லியம் வாய்ந்ததாகவும், வினைத்திறன் உடையதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.