அறிமுகமாகியது ZTE Nubia W5 ஸ்மார்ட் கைப்பேசி

691
மைக்ரோசொப்ட்டின் Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு ZTE நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட Nubia W5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இக்கைப்பேசியானது Quad Core Qualcomm Snapdragon 801 Mobile Processor மற்றும் 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றுடன் 5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4,500 mAh மின்கலம் என்பனவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

SHARE