டேட்டிங் செல்லும் காதலர்களுக்கு சூப்பர் டிப்ஸ்

444
காதலர்கள் தங்கள் உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள டேட்டிங் செல்வார்கள்.இந்த டேட்டிங் மூலம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது, அதே சமயத்தில் உறவுகள் பிரியவும் வாய்ப்பிருக்கிறது.

உங்கள் டேட்டிங் இனிமையானதாக அமைவதற்கு இதோ டிப்ஸ்,

1. காதலர்களாக இருக்கும் நீங்கள் டேட்டிங் என்ற பெயரில் தனிமையில் சந்திக்கும்போது ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

2. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், ஒருவரிடம் ஒருவர் உள்ள குறைகளை பொருட்படுத்தாமல், முதலில் நிறைகளை பரிமாறிக்கொள்ளுங்கள்.

3. குறைகள் தெரிந்தாலும், முதலில் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், ஏனெனில் அதுவே பிரிவிற்கு வழிவகுக்கும்.

4. பெண்கள், தங்கள் காதலரிடம் அவர்களின் ஊதியத்தை பற்றி கேட்காமல் இருப்பது நல்லது, ஏனெனில் ஆண்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் கோபம் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

5. அதுபோன்று, உங்களுக்கு இதற்கு முன்பு காதல் வந்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்பாதீர்கள்? அப்படி கேட்டுக்கொண்டாலும், அதற்கான பதிலுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

6. இந்த சந்திப்பின்போது திருமணப்பேச்சை பெண்கள் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆசையாக காதலிக்கும் ஆண்கள் திருமணம் என்றவுடன் கம்பீ நீட்டப்பார்ப்பார்கள்.

அதனால், இந்த கேள்வி அவர்களை எரிச்சலூட்டும், எனவே பெண்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

7. அதேபோன்று, ஆண்களும் தங்கள் காதலியை தொட்டுப்பார்ப்பது, உரசுவது போன்றவற்றை தவிர்த்துவிட்டு கொஞ்சம் முதிர்ச்சியாக நடந்து கொள்ளுங்கள்.

8. உங்கள் காதலியின் ஆடைகள் விடயத்தில் நீங்கள் தலையிட்டாலும், அதனை கொஞ்சம் நாகரீகமாக சொல்லுங்கள்.

மொத்தத்தில் இனிமையாக பேசி…இதயங்களை பரிமாறிக்கொண்டால் உங்கள் டேட்டிங் சூப்பராக இருக்கும்.

SHARE