தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆளும் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது.