கிளிநொச்சியில் சுகாதார உத்தியோகத்தர்களின் செயற்பாட்டால் கஷ்ட பிரதேச வைத்தியசாலைகளில் பணியாற்றும் அதிகளவானோருக்கு எரிபொருள் கிடைக்காமல் போயுள்ளது.
கிளிநொச்சியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நேற்று எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அரச வைத்திய அதிகாரிகள் சிலரின் செயற்பாட்டால் கஷ்ட பிரதேச வைத்தியசாலைகளில் பணியாற்றும் அதிகளவானோருக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தூரப்பிரதேச மக்கள்
சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் உள்ள ஜெயாபுரம் – வேரவில், முழங்காவில் – பச்சிலைப்பள்ளி போன்ற பகுதிகளில் வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் பணியாளர்களும் கிளிநொச்சி, பரந்தன் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
பெட்ரோலை பெற்றுக்கொள்ள நேற்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் வாராந்தம் வழங்கப்படும் பெட்ரோல் அளவு வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த அளவில் மோட்டார் சைக்கிளுக்கு நிரப்பிய பின்னர் மிஞ்சிய பெட்ரோலை எடுக்கமுடியாது என அரச வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றத்துடன் சென்றமை
தூரப்பிரதேசங்களில் இருந்து வந்த வைத்தியசாலை பணியாளர்கள் பெட்ரோல் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.