பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சந்தைகளில் பல்வேறு hair remover, losans ஆகியவை விற்கப்படுகின்றன. ஆனால் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளை மனதில் கொள்ள வேண்டும்.
பிறகு என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இயற்கையான முறையே எப்போதும் சிறந்தாக இருக்கும்.
மஞ்சளின் மகிமையை அறியாதவர்கள் யாரும் இல்லை. இது முகத்தில் மட்டுமல்ல கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்க பயன்படுகிறது.
தேவையற்ற முடிகளை நீக்க:
* கஸ்தூரி மஞ்சளை பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசி வர, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மறையும். கஸ்தூரி மஞ்சள் மூலிகை கடைகளில் அரைத்தே விற்பனை செய்யப்படுகிறது.
* மஞ்சளுடன் பப்பாளிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் பொலிவு பெறும்.
* பசும்பாலுடன் பாசிப்பயறு தோலை கலந்து அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறைந்து முகம் பளபளக்கும்.
* சாதாரண மஞ்சளை இரவு தூங்கும் போது அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு, காலை இளஞ்சூடான நீரில் கழுவி வந்தால் படிப்படியாக முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
|