கொழும்பு ஆர்ப்பாட்டம்: வைத்தியசாலையில் 55 பேர் அனுமதி, ஒருவர் கவலைக்கிடம்

404

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் ஒருவர் பொலிஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE