நாடாளுமன்றத்தை திங்கட்கிழமை மீண்டும் கூட்டுங்கள் – எதிர்க்கட்சி

287

நாடாளுமன்றத்தை திங்கட்கிழமை மீண்டும் கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை விவாதிக்கவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE