பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

633

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக், பவாத் ஆலம், நசிர் ஜாம்ஷெட், ஷாகெப் ஹாசன் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த பிரன்ட்ஷிப் கோப்பை 20 ஓவர் போட்டியில் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் 5 பேரும் இந்த போட்டியில் கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விசாரணை நடத்திய 3 பேர் கமிட்டி முன்பு 5 வீரர்களும் போட்டியில் கலந்து கொண்டதை ஒப்புக்கொண்டனர். கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது தங்களுக்கு தெரியாது என்று கூறினார். இதனை ஏற்க மறுத்த கமிட்டி 5 வீரர்களுக்கு தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலரை (ரூ.3 லட்சம்) அபராதமாக விதித்தது.

 

SHARE