அமெரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் பந்தய வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்களை ஒலிம்பிக் போட்டியில் வென்று சாதனை படைத்தவர். அத்துடன் உலக போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கிறார். 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற்ற 28 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் மீண்டும் நீச்சல் களத்துக்கு திரும்பி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஷார்லொட்டில் நடந்த கிராண்ட்பிரீ நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் மைக்கேல் பெல்ப்ஸ் முதலிடம் பிடித்தார். 2016–ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பெல்ப்ஸ் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறாரா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.